Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற நேற்று கடைசி நாளாகும். இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி யிடப்பட்டது.
அதன்படி, திருவாரூர் மாவட் டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 49 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருத்துறைப் பூண்டி(தனி) தொகுதியில் சி.சுரேஷ்குமார்(அதிமுக), க.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சா.ரஜினி காந்த்(அமமுக), ஆர்.ஆர்த்தி(நாம் தமிழர் கட்சி), த.பாரிவேந்தன்(சமக) மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் என 11 பேர் போட்டியிடுகின்றனர்.
மன்னார்குடி தொகுதியில் சிவா.ராஜமாணிக்கம்(அதிமுக), டி.ஆர்.பி.ராஜா(திமுக), எஸ்.காமராஜ்(அமமுக), ராம.அரவிந்தன் (நாம் தமிழர் கட்சி), எஸ்.அன் பானந்தம்(மநீம) மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் என 10 பேர் போட்டியிடுகின்றனர். திருவாரூர் தொகுதியில் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்(அதிமுக), பூண்டி கே.கலைவாணன்(திமுக), எம்.ஏ.நசீமாபானு(எஸ்டிபிஐ), ஆர்.வினோதினி(நாம் தமிழர் கட்சி), பீ.கபிலரசன்(மநீம), ஏ.கோமதி(பகுஜன் சமாஜ் கட்சி), என்.நித்தியானந்தம்(தமிழ்நாடு இளை ஞர் கட்சி), எம்.தியாக ராஜன்(புதிய தமிழகம்), ஜே.பன்னீர்செல்வம்(அகில பாரத இந்து சேவா கட்சி) மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் போட்டியிடுகின்றனர்.
நன்னிலம் தொகுதியில் ஆர்.காமராஜ்(அதிமுக), எஸ்.ஜோதிராமன்(திமுக), என்.ராமச்சந்தி ரன்(அமமுக), எஸ்.பாத்திமா பர்ஹானா(நாம் தமிழர் கட்சி), ஆர்.ரவிச்சந்திரன்(பகுஜன் சமாஜ் கட்சி), டி.கணேசன்(இந்திய ஜனநாயக கட்சி), எஸ்.நித்தியானந்தம் (அனைத்து மக்கள் அரசியல் கட்சி), கே.என்.பனசை அரங்கன்(தேசிய மக்கள் சக்தி கட்சி), எம்.முருக வேல்(அண்ணா திராவிடர் கழகம்) மற்றும் 6 சுயேச்சைகள் என 15 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 97 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், பேராவூரணி தொகுதியில் 3, ஒரத்தநாடு தொகுதியில் 2, தஞ்சாவூர், திருவையாறு, பாப நாசம் தொகுதிகளில் தலா 2 என 8 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, மாவட்டத்தில் 89 பேர் போட்டியிடுகின்றனர்.பாபநாசம் தொகுதியில் கி.கோபிநாதன்(அதிமுக), ஜவாஹிருல்லா(மமக), எம்.ரெங்கசாமி(அமமுக), ந.கிருஷ்ண குமார்(நாம் தமிழர் கட்சி), க.சாந்தா(மநீம), இரா.முத்துக் குமார் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி), மெஹராஜ்பானு(அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) மற்றும் 6 சுயேச்சைகள் என 13 பேர் போட்டியிடுகின்றனர்.
பேராவூரணி தொகுதியில் எஸ்.வி.திருஞானசம்பந்தம்(அதிமுக), அசோக்குமார் (திமுக), சிவக்குமார்(தேமுதிக), திலீபன்(நாம் தமிழர் கட்சி), பச்சமுத்து(இந்திய ஜனநாயக கட்சி), துரை ராஜ்(பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 2 சுயேச்சைகள் என 8 பேர் போட்டியிடுகின்றனர்.
பட்டுக்கோட்டை தொகுதியில் என்.ஆர்.ரங்கராஜன்(அதிமுக), கா.அண்ணாதுரை(திமுக), எஸ்டிஎஸ்.செல்வம்(அமமுக), கீர்த்திகா அன்பு(நாம் தமிழர் கட்சி), பா.சதாசிவம் (மநீம), சுந்தர்ராஜ்(அனைத்து மக்கள் புரட்சி கட்சி), மெய்க்கப்பன்(அண்ணா திராவிடர் கழகம்) மற்றும் ஒரு சுயேச்சை என 8 பேர் போட்டியிடுகின்றனர்.
கும்பகோணம் தொகுதியில் தர் வாண்டையார்(மூமுக), க.அன்பழகன்(திமுக), பாலமுருகன்(அமமுக), ஆனந்த் (நாம் தமிழர் கட்சி), கோபால கிருஷ்ணன்(மநீம) மற்றும் 5 சுயேச்சைகள் என 10 பேர் போட்டி யிடுகின்றனர்.
ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கம்(அதிமுக), எம்.ராமச்சந்திரன்(திமுக), மா.சேகர்(அமமுக), கந்தசாமி (நாம் தமிழர் கட்சி), ரெங்கசாமி (மநீம), ஸ்டாலின் (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் சுயேச்சைகள் என 12 பேர் போட்டியிடுகின்றனர்.
தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடைநம்பி (அதிமுக), டிகேஜி.நீலமேகம் (திமுக), ராமநாதன் (தேமுதிக), சுந்தரமோகன் (மநீம), சுபாதேவி (நாம் தமிழர் கட்சி), கரிகாலச்சோழன் (தேசியவாத காங்கிரஸ்) மற்றும் 6 சுயேச்சைகள் என 12 பேர் போட்டியிடுகின்றனர்.
திருவிடைமருதூர் தொகுதியில் எஸ்.வீரமணி(அதிமுக), கோவி.செழியன் (திமுக), குடந்தை அரசன் (அமமுக), திவ்யபாரதி (நாம் தமிழர் கட்சி), மதன்குமார் (இந்திய ஜனநாயக கட்சி), கண்ணையன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ), புரட்சிமணி (பகுஜன் சமாஜ்) மற்றும் 7 சுயேச்சைகள் என 14 பேர் போட்டியிடுகின்றனர்.
திருவையாறு தொகுதியில் பூண்டி எஸ்.வெங்கடேசன்(பாஜக), துரை.சந்திரசேகரன்(திமுக), வேலு.கார்த்திகேயன்(அமமுக), செந்தில்நாதன்(நாம் தமிழர் கட்சி), திருமாறன்(இந்திய ஜனநாயக கட்சி) உள்ளிட்ட 12 பேர் போட்டி யிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT