Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM
சட்டப்பேரவைத் தேர்தலுடன் திமுக சகாப்தம் முடிந்து விடும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
போளூர் அதிமுக வேட் பாளர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, "ஜெயலலிதா வின் ஆட்சி தமிழ கத்தில் மலர வேண்டும் என்ற எண் ணத்தில் இவ்வளவு நேரம் காத்திருக்கும் மக்களை பார்க்கிறேன். அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா., புதிய நீதி கட்சி ஆகியவை உள்ளன. இது வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்ற பொய்யை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தை தொடர்ந்து கூறிவருகிறார். அ.தி.மு.க. எவ்வளவு பலம் வாய்ந்தது என்று போளூரில் கூடிய கூட்டத்தை பார்த்தாலே தெரியும். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். இந்தக் கூட்டம் பிரச்சாரக் கூட்டம் இல்லை வெற்றிவிழா கூட்டம் போல் உள்ளது. இவ்வளவு மக்கள் இங்கு கூடி இருக்கிறார்கள். அத்தனை பேரும் களப்பணியாற்றி வெற்றி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்தத் தேர்தலுடன் திமுக சகாப்தம் முடிந்து விடும்.
இந்தியாவிலேயே உயர்கல்வியில் அதிகம் படிப்பது தமிழகத்தில்தான். நான்தான் வசதி படைத்த மாணவருக்கு என்னென்ன கிடைக்குமோ அது சாதாரண குடும்பத்து மாணவனுக்கும் கிடைக்க வேண்டும். அதை நிறைவேற்றித் தரும் வகையில் அதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலணி, சீருடை, புத்தகம், பை, மிதிவண்டி, அறிவுப் பூர்வமான கல்வி மடிக்கணினி என அத்தனையும் தந்து கொண்டிருக்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு மாதம் தோறும் மகளிருக்கு ரூபாய் 1,500, வாஷிங்மெஷின், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். மகளிர் சுய உதவி கடன்கள், கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் வாங்கிய நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். போளூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக் களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT