Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு :

திருச்செங்கோட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

திருச்செங்கோட்டில் அமைக்கப் பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார். இதன்படி ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக அமைக்கப் படும் வாக்கு எண்ணிக்கை மையங்களை ஆட்சியர் மெகராஜ் ஆய்வு செய்தார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை, வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதி, செய்தியாளர்களுக்கான அறை உள்ளிட்டவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை தரமானதாகவும், துரிதமாகவும் மேற் கொள்ளும்படி ஆட்சியர் அறி வுறுத்தினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மா.ரவிக்குமார், திருச்செங்கோடு தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்டிஓ ப.மணிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x