Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
காஞ்சிபுரம் நகரில் பஞ்ச பூதஸ்தலங்களில் (ப்ருத்திவி) மண்ணாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு பங்குனி உத்திரம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் மூன்றா்ம் நாளான நேற்று முன்தினம் இரவு சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் ஏகாம்பரநாதர், காமாட்சியம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4-ம் நாளான நேற்று நாக வாகனத்தில் காமாட்சியம்மனுடன், ஏகாம்பரநாதர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், 4 ராஜவீதிகளில் உலா வந்தார். இதேபோல், இரவு வெள்ளி ரிஷப வாகன உற்சவம் நடைபெற்றது.
இன்று (22-ம் தேதி) இரவு ராவணேஸ்வரர் உற்சவம், 23-ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம், 24-ம் தேதி திருத்தேரோட்டம், 26-ம் தேதி வெள்ளி மாவடி சேவை, 27-ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT