Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த வாகனத் தணிக்கையில் உரியஆவணம் இல்லாத ரூ.69.36 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணம்வழங்கியதன் அடிப்படையில் ரூ.37.39 லட்சம் ரொக்கம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வாக்காளர்களுக்கு வழங்க பணம், பரிசுப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்கின்றனர். அதே வேளையில் வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணம் இல்லாத பணம்பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப் படுகின்றன.
இதன்படி நாமக்கல் மாவட்டத் தில் பறக்கும் படை மற்றும் நிலை யான கண்காணிப்புக் குழுவினர் சோதனை மேற்கொண்டதில் இது வரை ரூ.69 லட்சத்து 36 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.5 லட்சத்து 12 ஆயிரத்து 750 மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் உரிய ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில் ரூ.37 லட்சத்து 39 ஆயிரத்து 980 ரொக்கம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல் சி-விஜில் செயலி மூலம் 99 புகார்கள் அளிக்கப்பட்டுள் ளன. இவற்றில் 70 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. 29 புகார்கள் நிரா கரிக்கப் பட்டுள்ளது. மாவட்ட மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு இலவச தொலைபேசி அழைப்பு எண் 1800-425-7021-க்கு 15 புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6 புகார்மீது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. 9 புகார்களுக்கு முகாந்திரம் எதுவும் இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT