Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரிய பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொருட்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. இவற்றின் முக்கியத்து வத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தில் உள்ள அரிய பொருட்களில் ஏதேனும் ஒன்றை காட்சிப்படுத்தி, அது பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு மாதம் முழுவதும் அந்தப் பொருள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கும். இவ்வாறு, அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியாக இந்த சிறப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதன்படி, மார்ச் மாத சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாளையக்காரர்களுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போரில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முழுவதும் பீரங்கிகள் கொண்டு தகர்க்கப்பட்டது.
அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பீரங்கி குண்டு இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாஞ்சாலங்குறிச்சி போர் பற்றிய தகவல்களும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன என்று, கண் காட்சியை தொடங்கிவைத்த காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.
இந்த கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT