Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM
திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளின் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ள திமுகஸ்டிக்கர்களை அகற்றவும், ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிமுக மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏராளமான வீடுகளின் வெளிக் கதவுகளில் திமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் உள்ளாட்சி சட்ட விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ஸ்டாலின் படத்துடன் கூடிய “ஸ்டாலின் தான் வர்றாரு, விடியல் தரப் போறாரு’ என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் பொது இடங்களிலும் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இதேபோல, தேர்தல் ஆணைய அனுமதியின்றி பதாகைகள், ஒளிரும் பதாகைகள் உள்ளிட்டவற்றை வைத்துள்ளார்கள். எனவே, வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்றுவதுடன், தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்குண்டான செலவுகளை அந்தந்த தொகுதி திமுக வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT