Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி ளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. நாமக்கல் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், அதிமுக, திமுக உள்பட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதுபோல், சேந்தமங்கலம் (தனி) தொகுதியில் 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 17 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. ராசிபுரம் (தனி) தொகுதியில் 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 15 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. திருச்செங்கோடு தொகுதியில் 40 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 37 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதுபோல், குமாரபாளையம் தொகுதியில் 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 35 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. பரமத்தி வேலூர் தொகுதியில் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 27 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 214 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 54 வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டு 160 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஈரோடு
அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டன. பெருந்துறைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் தோப்பு வெங்கடாசலம் மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதன்படி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2, ஈரோடு மேற்கில் 7, மொடக்குறிச்சியில் 10, பெருந்துறையில் 10, பவானியில் 7, அந்தியூரில் 9, கோபியில் 12, பவானிசாகரில் 5 என மொத்தம் 62 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT