Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 194 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது.அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில், இறுதிநாளான நேற்று சுயேச்சைகள் அதிக அளவில் வேட்பு மனுதாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று 8 தொகுதிகளிலும் மொத்தம் 92 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அதிகபட்சமாக பெருந்துறை தொகுதியில் 19 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வேட்புமனு தாக்கல் நிறைவில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 23 வேட்பாளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 22 வேட்பாளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 24 வேட்பாளர்களும், பெருந்துறைத் தொகுதியில் 34 வேட்பாளர்களும், பவானி தொகுதியில் 23 வேட்பாளர்களும், அந்தியூரில் 28 வேட்பாளர்களும், கோபி தொகுதியில் 27 வேட்பாளர்களும், பவானிசாகர் தொகுதியில் 13 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 194 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். பெருந்துறை தொகுதியில் அதிகபட்சமாக 34 வேட்பாளர்களும், பவானிசாகர் தொகுதியில் குறைந்தபட்சமாக 13 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் மனுக்களைத் திரும்ப பெற்ற பின்பு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT