Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்துதேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமை வகித்து பேசும் போது, “தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட 5 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் 3 தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் (தனி),வாசுதேவநல்லூர் (தனி) தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக உள்ள ராஜீ நாராயண சுவாமியின் செல்போன் எண் 80155 77002. கடையநல்லூர், தென்காசி தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக உள்ள பிரகாஷ் பிந்துவின் செல்போன் எண் 80155 77004. ஆலங்குளம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக உள்ள வேதபதி மிஸ்ராவின் செல்போன் எண் 80155 77006 என்றார் அவர்.
முன்னதாக, 100 சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் முன்னிலையில், தேர்தல் பார்வையாளர்கள் தொடங்கி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT