Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

வியாபாரியிடம் ரூ.20 லட்சம் பறிமுதல் :

திருவண்ணாமலை

ஆரணி பட்டுச்சேலை வியாபாரியி டம் ரூ.20 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கூட்டுச் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆரணியில் இருந்து களம்பூர் நோக்கி சென்ற இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதில் சென்றவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அப்போது, அந்த பையில் ரூ.20 லட்சம் ரொக்கப் பணம் இருந்துள்ளது.

இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்திய போது, இரு சக்கர வாகனத்தில் சென்றவர் ஆரணி நகரம் கொசப்பாளையம் பகுதியில் வசிக்கும் பட்டு சேலை வியாபாரி தர் என்பதும், தொழில் ரீதியாக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால், அந்த பணத்துக்கு ஆவணங்கள் இல்லாததால், அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, வருமான வரித் துறையிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x