Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,295 வாக்குச்சாவடி மையங்களில் ஏப்ரல் 6-ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று கடலூர் மற்றும் சிதம்பரம் தொகுதியில் தலா ஒரு வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 2-ம் நாளன்று 24 வேட்பாளர்கள் 24 மனுத் தாக்கல் செய்தனர். கடந்த 16-ம் தேதி செவ்வாய்கிழமை 2 பேர் மனுத் தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் 34 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் . நேற்று 40 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 102 மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 19) வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள7 சட்டமன்ற தொகுதிகளில் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் தேர் தல் நடைபெற உள்ளது.முதல் நாளான அன்று மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கலின் 2-ம் நாளன்று அரசியல்கட்சியினரும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 25 வேட்பாளர் கள் 43 மனுக்களை தாக்கல் செய்தனர். 16ம் தேதி 6 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று முன் தினம் 27 மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று 38 வேட்பாளர்கள் 45 மனுத் தாக்கல் செய்தனர். இதுவரை 96 வேட்பாளர்கள் 121 மனுத் தாக்கல் செய்துள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT