Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டமன்ற தேர் தலில் போட்டியிட நேற்று வரை 182 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் ஏப்ரல் 6-ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. நாளை (மார்ச் 19) வேட்பு மனுத்தாக்கல் செய்யகடைசி நாள் என்பது குறிப்பிடத் தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல் நாளன்று 7 சட்டமன்ற தொகுதிகளிலும் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.2-ம் நாளன்று அரசியல் கட்சியினரும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 25 வேட்பாளர்கள் 43 மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை 6 பேர் மனுத் தாக்கல் செய்தனர். நேற்று 27 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 76 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று 27 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 44 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,295 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் நாளன்று(மார்ச் 12) 9 சட்டமன்ற தொகுதிகளில் கடலூர் மற்றும் சிதம்பரம் தொகுதியில் தலா ஒரு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.2-ம் நாளன்று 24 வேட்பாளர்கள் 24 மனுக்களை தாக்கல் செய் தனர். நேற்று முன்தினம் செவ் வாய்கிழமை 2 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
நேற்று 34 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நேற்று வரை62 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 44 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT