Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

ரேஷனில் பாரம்பரிய அரிசி வழங்க வலியுறுத்தல் :

திருச்சி

பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பிரதிநிதிகள் பங்கேற்ற கருத்தரங்கு கிரியேட் அமைப்பின் சார்பில் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், சான்றிதழ் பெறுதல் மற்றும் நுகர்வோர் மத்தியில் சந் தைப்படுத்துதல் என பல்வேறு தலைப்புகளில் கலந்தாய்வுகள் நடைபெற்றன. கருத்தரங்குக்கு தலைமை வகித்த கிரியேட் அமைப்பின் தலைவர் துரைசிங்கம், பின்னர் கூறியது:

தமிழக அரசு தெளிவான இயற்கை வேளாண்மை கொள்கையை உருவாக்கி, வெளியிட வேண்டும். தமிழக அரசு மாவட்டந்தோறும் நுகர்வோருக்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, பாரம்பரிய உணவு வகைகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகளை விளக்க வேண்டும். அரசு தனது உணவு கொள்முதல் கொள்கையில் பாரம்பரிய அரிசி வகைகளையும் ஒரு உணவுப் பொருளாக இணைத்து, வாரம் ஒரு நாள் ஒரு பாரம்பரிய அரிசியை சத்துணவுத் திட்டத்திலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்துத் திட்டத்திலும் சேர்க்க வேண்டும். ரேஷன் கடைகளில் செயற்கையாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை நிறுத்தி, பாரம்பரிய அரிசியை வழங்க வேண்டும் என்றார்.

முன்னதாக கருத்தரங்கில், எப்எஸ்எம் நிறுவன மேலாண்மை இயக்குநர் அபுபக்கர், நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எம்.சேக ரன், சாஸ்த்ரா பல்கலைக்கழக முதுநிலை இணை பேராசிரியர் அ.சத்யா, முன்னாடி இயற்கை விவசாயி பி.அன்புச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர். கிரியேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.யோகநாதன் வரவேற்றார். கிரியேட் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.வரதராஜன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x