Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு :

உடுமலை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கிய 8 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் சம்பந்தமான புகார் அளிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை வட்டாட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "கணக்கில் வராத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களால் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான பணப்பரிவர்த்தனைகள், நகை ஆபரணங்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பான தகவல்களை 04252230630, 9445000278, 9994278400. ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x