Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறைந்த மையங்களில் விழிப்புணர்வு :

உதகை: நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 868 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக, 3,845 மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தொகுதி வாரியாக மாதிரி வாக்குப் பதிவு குறித்து தேர்தல் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கடந்த தேர்தலில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவான மையங்கள் குறித்து தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 20 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவான 105 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள் உள்ள பகுதிகளில், நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ‘கறை நல்லது’ என்ற வடிவமைப்பில் பூங்கா பணியாளர்கள் வரிசையில் நின்று, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x