Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம், திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
நூல் மற்றும் துணி சீராக கிடைக்கும் வரை நூல் மற்றும் துணி ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய பிரதமர் அலுவலகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சகம், ஜவுளி துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திய பருத்தி கழகத்திடம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பருத்தியைகொள்முதல் விலையில் நூற் பாலைகளுக்கு தேவையான அளவு விற்க வேண்டும்.
விலை சீராகும் வரை வர்த்தகர்களுக்கு விற்கக்கூடாது, நூற்பாலை சங்கங்களுக்கு நூல் விலையை குறைக்க வேண்டும். நூல் விலை சீராகும் வரை நூல் ஏற்றுமதியை நிறுத்திவைக்க வேண்டும். நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 13-ம் தேதி ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தம் செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைதொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப் பின் கூட்டம், அவிநாசிசாலையிலுள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
பனியன் தொழிற்சங்கம், உரிமையாளர்கள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.
ஏற்றுமதியாளர்கள் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். நூல் விலை உயர்வு குறித்தும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பனியன் நிறுவன உரிமையாளர்கள் சங்கங்களை உள்ளடக்கிய மேலும் ஒரு கூட்டுக் கமிட்டி அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT