Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM

விழுப்புரம் மாவட்ட தொகுதி வாரியாக - 2,844 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன :

சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை உள்ளார்.

விழுப்புரம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் 7 தொகுதிகளுக்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆட்சியர் அண்ணாதுரை அனுப்பி வைத்தார்.

7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவையான 2,844 பேலட் யூனிட், 2,844 கண் ட்ரோல் யூனிட் மற்றும் 3034 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

இந்த இயந்திரங்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகு தியிலும் உள்ள ஓரிடத்தில் பலத்த பாதுகாப்புடன் சிசி டிவி கண்காணிப்புடன் வைக்கப்பட உள்ளது.

இந்த அறையில் எவ்வித மின்சாதன ஸ்விட்ச், போர்ட் எதுவும் இருக்காது. போலீஸாரின் கட்டுப்பாட்டில் இந்த அறைக்கான விளக்கு எரியவைக்கும் ஸ்விட்ச் இருக்கும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x