Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM

மத்திய மண்டலத்தில் 8 அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டி - அமைச்சர் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு :

திருச்சி

அதிமுகவின் வேட்பாளர் பட்டிய லில் மத்திய மண்டலத்தில் மொத்தம் உள்ள 22 அதிமுக எம்எல்ஏக்களில் 8 பேருக்கு மட்டும் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ரங்கம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான எஸ்.வளர்மதிக்கும், மண்ணச்சநல்லூர் தொகுதியின் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனுக் கும் இம்முறை வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ண ராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி எம்எல்ஏ ம.கோவிந்தராசு ஆகியோருக்கு தற்போது மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏவாக இருந்த இ.ஏ.ரத்தின சபாபதிக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. இவர், டிடிவி.தினகரன் ஆதரவாளராக இருந்து, பின்னர் அதிமுகவில் இணைந்து பணியாற்றினார். இதேபோன்று, கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்த ப.ஆறுமுகத்துக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவருக்கும், அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட் டத்திலுள்ள மயிலாடுதுறை தொகு தியின் எம்எல்ஏவாக அதிமுகவைச் சேர்ந்த ராதாகிருஷ் ணன் உள்ளார். இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ராதாகிருஷ்ணனுக்கு தற் போது வாய்ப்பு கிடைக்கவில்லை. இதேபோல, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தால், தற்போதைய அதிமுக எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங் கத்துக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமாகாவுக்கு பட்டுக்கோட்டை?

இதுதவிர தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா கேட்பதால், அங்கு இன்னும் வேட்பாளர் அறிவிக் கப்படவில்லை. பட்டுக்கோட்டை எம்எல்ஏவாக அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சேகர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக அதிமுக வைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் உள்ளார். இந்த தொகுதிக்கு இதுவரை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. கூட் டணி கட்சிக்கும் ஒதுக்கீடு செய்ய வில்லை.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு இறந்ததை அடுத்து அவரது மகன் சண்முகபிரபு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. பாபநாசம் முன் னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோபிநாதனுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தில் தற்போது உள்ள 22 அதிமுக எம்எல்ஏக்களில் 8 பேருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x