Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM

வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் - தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் புகார் அளிக்க ஏற்பாடு :

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் மாவட்டத்துக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நாளை (12-ம் தேதி) வேலூருக்கு வரும் நிலையில், தீபக் ஆர்.லட்சுமிபதி என்பவர் வேலூர் மற்றும் குடியாத்தம் தனி தொகுதிக்கான பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்னஞ்சல் முகவரி

காட்பாடியில் உள்ள விருந்தினர் மாளிகை அறை எண் 1-ல் தங்கும் அவரை 94987-47538 என்ற எண்ணில் அல்லது deepakrl.irs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் தனி தொகுதிக்கு அமித்கடாம் என்பவர் தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காட்பாடி விருந்தினர் மாளிகை அறை எண் 2-ல் தங்கும் அவரை 94987-47539 என்ற எண் அல்லது askmit87@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மிரட்டினால் புகார் செய்யலாம்

இவர்களில் ஊரக பகுதிகளில் அனுமதியில்லாமல் சுவர் விளம்பரம் எழுதுவது, நகர் பகுதியில் சுவர் விளம்பரம் எழுதுவது, வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசுப் பொருட்கள், மது வகைகள் விநியோகம் செய்தல், ஆயுதம் கொண்டு மிரட்டுதல் மற்றும் வேட்பாளர் தேர்தல் செலவினம் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x