Published : 10 Mar 2021 03:12 AM
Last Updated : 10 Mar 2021 03:12 AM

பவ்டா தொண்டு நிறுவனத்தில் மகளிர் தின விழா :

பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மேலாண் இயக்குநர் சி. ஜாஸ்லின் தம்பி பேசுகிறார்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சி. ஜாஸ்லின் தம்பி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், விழுப்புரம் மண்டலபொது மேலாளர் (பொறுப்பு)ஆனந்தவேலன் வரவேற்புரை யாற்றினார்.

முதுநிலை நீதிபதி சி. சங்கர். பவ்டா இயக்குநர் பிரபலாஜெ ராஸ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். பவ்டா முதன்மை நிர்வாக அலுவலர் அல்பீனா ஜாஸ், விழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் முகேஷ், பவ்டா முதன்மை பொது மேலாளர் வெங்கடாசலபதி, பொது மேலாளர்கள் பாரி, சாந்தாராம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதுநிலை பொது மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். மேலும் பவ்டா நிறுவனத்தைச் சேர்ந்த சிவகுமார், நாராயணன், சக்திவேல், தேவராஜ், தினகரன், கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்களைப் பாதுகாக்க ஊர் காவல் படை அமைக்கப்பட வேண் டும். காவல்துறையின் காவலன் செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டும். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங் கப்படும் வேலைவாய்ப்பில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். 10 ஆயிரம் பெண்களைக் கொண்ட கிராமங்கள், மாநகராட்சிகளில் பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க குடும்ப ஆலோசகரை நியமிக்க வேண்டும்.

மகளிரின் பாதுகாப்பிற்காக காவல் துறையினருடன் இணைந்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அறைகள் உருவாக்க வேண்டும், இளம் விதவைகள் உருவாகாமல் தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மகளிர் தின விழாவில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x