Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM

திருப்பத்தூரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் : 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

திருப்பத்தூரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்டவர் களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சேஞ்ச் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பழனிவேல்சாமி தலைமை வகித்தார். தொண்டு நிறுவன இயக்குநர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, கந்திலி, ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டபெண்கள் கலந்து கொண்டனர். இதில், பெண்கள் சாதனை யாளர்களாக மாற வேண்டும், கல்வி, விளையாட்டு, தொழில், வேலை வாய்ப்பு, சுய தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண்பது எப்படிஎன்பது குறித்து விளக்கமளிக்கப் பட்டது.

தொடர்ந்து, பெண்களுக்கான பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, பாட்டுப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரஸ்வதி போட்டிகளில் வெற்றிபெற்ற பெண்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பெண்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்,வாக்களிக்க பணம் பெற மாட்டோம், தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை அனைவரும் ஏற்றனர்.

இதையடுத்து, குடும்ப சூழ்நிலை காரணமாக பெண் தொழிலாளர்கள் அதிகரித்து வருவதால், பெண்களுக்கு தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும், 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கினால் அதற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் ஹேப்ஸ் ஒருங்கிணைப் பாளர் உஷா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x