Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி நேற்று கூறும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்குவோம் என்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடுத்திருக்கும் சவால். சுயமரியாதைக்கு அடித்திருக்கும் சாவுமணி. ஆங்கிலேயர் நாட்டை விட்டுச்செல்லும்போது ஒரு ரூபாய் கடன் இல்லை. கணிசமான கையிருப்பை விட்டுச்சென்றனர்.
இன்றைக்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், ஆட்சியைப் பிடிக்கவும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்து வருகின்றன. இவ்வாறான அறிவிப்புகள் மக்கள் நலனுக்கு எதிரானது, உழைப்புக்கு விரோதமானது. பெண்களின் வாக்குகளை பெறும் நோக்கில் மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவித்திருப்பது, மக்கள் கொண்டிருக்கும் அறியாமையை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்க செய்யும் சூழ்ச்சி வலை. இந்த அறிவிப்பை கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT