Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

வீடூர் அணை, வேப்பூர் பகுதிகளில் - இருவேறு இடங்களில் இரு பெண்கள் தற்கொலை :

விழுப்புரம்/விருத்தாசலம்

திண்டிவனம் அருகே வீடூர் அணையில் நேற்று காலை ஒரு பெண் உடல் கிடப்பதாக விக்கிரவாண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டனர். அப்போது கரையில் இருந்த பையை சோதனைசெய்த போது கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், இறந்தவர் விழுப் புரம் சாலமேடு ஞானசிகாமணி மனைவி கவிதா (48) என்று தெரியவந்தது.

அக்கடிதத்தில் கணவர் கொடுமை செய்வதாகவும், மகள் திருமணம் செய்துகொடுத்த இடத்தில் வாழாமல் வந்துவிட் டதாகவும், மகளையும் மருமகனையும் ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் எனவும் கவிதா குறிப்பிட்டு இருந்தார். கவிதாவின் உடலை போலீஸார் மீட்டுபிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக் கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு பெண் தற்கொலை

வேப்பூரை அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சநாதன் மகள் திலகவதி (22) என்பவரும், சின்னசாமி மகன் கோபி (21) என்பவரும் கடந்த சில வருடங்களாக ஒருவரை ஒருவர் விரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு திலக வதி வற்புறுத்தியுள்ளார். அதற்கு கோபி மறுப்புத் தெரிவித்தாராம். இதனால் மனமுடைந்த திலகவதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஒரு கடிதம்எழுதியுள்ளார். செல்போனில் குரல் பதி வையும் பதிவிட்டு தனது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி திலகவதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மஞ்சநாதன் அளித்தப் புகாரின் பேரில் வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோபி, அவரது தந்தை சின்னச்சாமி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x