Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

வாகனத் தணிக்கை; ஆட்சியர் ஆய்வு :

திருப்பூர்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 24 பறக்கும் படைக் குழுக்கள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 16 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வளம் பாலம், செல்லாண்டியம்மன் கோயில் அருகில், பல்லடம் தொகுதி அவிநாசிபாளையம், தாராபுரம் தொகுதி ஆகிய பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்வதுடன், அந்த வாகனங்களின் விவரங்களையும் முழுமையாக பதிவிட வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து திருப்பூர் காங்கயம்பாளையம்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தாராபுரம் புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும் ஆய்வு செய்தார். வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்திட வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x