Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை : ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி இல்லை :

திருவள்ளூர்

தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்த அனுமதி கிடையாது என மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒலிபெருக்கிகளை இரவு நேரத்தில் பயன்படுத்தும்போது வயதானவர்களும், நோயாளிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, ஒலிபெருக்கிகளை இரவு 10 மணி முதல் காலை 6 வரை பயன்படுத்த அனுமதி இல்லை. அதிலும் அனுமதிக்கப்பட்ட பகல் நேரங்களில் கூம்பு வகை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x