Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM
விழுப்புரம்/விருத்தாசலம்/கடலூர்
திண்டிவனம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் 2,241 அரசு வழங்கும் இலவச பென்சில்கள், பணத்தை பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வடவாடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மங்கலம்பேட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ராமானுஜம் என்பவரிடம் பரிசோதனை செய்தனர். அவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.94 ஆயிரத்து 250 பணத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர்
சிதம்பரம் அருகே வல்லம்படுகை சோதனை சாவடி அருகேநிலையான கண்காணிப்பு குழுவினர் சிதம்பரம் வேளாண் பொறி யியல் துறை உதவிப்பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினிலாரியில் இருந்த சீர்காழி புத்தூரைச் சேர்ந்த உத்தரபதி(26) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 43 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.இது போல சிதம்பரம் அருகே பி.முட்லூர் பகுதியில் கடலூர் வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் னிவாசன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவின் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீர்காழியில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் இருந்த சீர்காழியைச் சேர்ந்த பிரவீன்குமார்(25) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்தி ருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்
வானூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர் அம்பிகாதலைமையிலான குழுவினர் கிளியனூரை அடுத்த நல்லாவூர் புதூர் அருகே நேற்று முன்தினம்இரவு வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.அப்போது புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இருந்த பைக்கில் வந்த கார்த்திகேயன் (28), நோணாங்குப்பம் சிவலிங் கம் (20) ஆகியோரிடம் ரூ.1,82,640இருந்தது. இருவரும் புதுச்சேரி யில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வருவதா கவும், பொதுமக்களிடம் இருந்து கடன் தொகையை வசூலித்து வருவதாகவும் கூறினர். உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதே போல் திண்டிவனம் அருகே வீடூர் பகுதியில் வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல வேணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே பைக்கில் வந்த அடகு கடை உரிமையாளர் சதீஷ் ரூ. 1,42,060 மற்றும் கால் சவரன் தங்க மோதிரங்கள் 5-ஐ கொண்டு செல்வது தெரிய வந்தது. உரிய ஆவணம் இல்லா ததால் அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திண்டிவனம் கருவூலத்தில் ஒப்ப டைத்தனர்.
இதேபோல் திண்டிவனம் அருகே தீவனூர் பகுதியில் திண்டிவனம் பொதுப்பணித் துறை அலுவலர் ஜான்சிராணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
லாரியில் வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திலீபனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசா ரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் லத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு தமிழக அரசின் 2,241 இலவச பென்சில்கள் அடங்கிய 3 அட்டைப் பெட்டிகளை கொண்டு செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து மயிலம்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாளிடம் ஒப்ப டைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT