Published : 05 Mar 2021 03:18 AM
Last Updated : 05 Mar 2021 03:18 AM

இட ஒதுக்கீடு அறிவிப்பைக் கண்டித்து - வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு :

கோவில்பட்டி/ திருநெல்வேலி

கள்ளர், மறவர், அகமுடையார், ஆப்பநாட்டுமறவர் என 64 வகையான சாதிகளை உள்ளடக்கியசீர்மரபினர் சமூகத்துக்கு கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவற்றில் உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றும், தமிழக அரசுஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும்இடஒதுக்கீடு அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் சமூகநீதி பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து விளாத்திகுளம் தொகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விளாத்திகுளம் சத்யா நகர்,மீரான்பாளையம் தெரு, தங்கம்மாள்புரம், மார்த்தாண்டம்பட்டி, கமலாபுரம், குருவார்பட்டி கிராமங்களில் பசும் பொன் தேசியகழக நிர்வாகி பரமசிவதேவர்,மறத்தமிழர்சேனை ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் வீடுகளில் கருப்பு கொடிகட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி

இட ஒதுக்கீடு விவகாரத்தில்திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.

நாங்குநேரி அருகேயுள்ளஆணையப்பபுரம், மறுகால்குறிச்சி, மஞ்சங்குளம், சூரங்குடி, சங்கரன்கோவில் அருகேயுள்ள உறுமன்குளம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கருப்பு கொடிகளைகட்டிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சியில் உள்ள ஒரு தெருவில் நேற்றுகருப்பு கொடிகள் கட்டப்பட்டி ருந்தன.

விளாத்திகுளம் தொகுதியில் 50-க்கும்மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டிஎதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x