Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

வேலூர் மாவட்டத்தில் - வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் ஆய்வு :

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) என மொத்தம் 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரு மான சண்முகசுந்தரம் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறும்போது,"இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வேலூர், அணைக் கட்டு ஆகிய 2 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.

காட்பாடி தொகுதியில் பதிவா கும் வாக்குகள் காட்பாடி அரசு சட்டக்கல்லூரியில் எண்ணப்படு கிறது. குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 2 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக் னிக் கல்லூரியில் எண்ணப்படு கிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் ஆணையத்தின் ஆலோ சனைகள்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, தேர்தல் பார்வையா ளர் அறை, வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட செய்ய வேண்டிய பணிகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப் படவேண்டிய பாதுகாப்பு அம்சங் கள் முறையாக செய்யப்பட்டு வருகிறது.

கரோனா பரவலை தடுக்க கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டதால் அதற்கு ஏற்ப வாக்கு எண்ணும் மேஜைகள் கூடுதலாக அமைக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல வாக்கு எண்ணும் மையங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகள், மகளிர் குழுக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்களிக்க பணம், பரிசு பொருட்கள் வாங்க மாட்டோம் எனக்கூறி உறுதிமொழி ஏற்க, அதை மாணவர்கள் பின்தொடர்ந்து கூறினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஷேக்மன்சூர் (குடியாத்தம்), பானு (கே.வி.குப்பம்), கணேஷ் (வேலூர்), குடியாத்தம் துணை காவல் கண்காணிப் பாளர் தர், வட்டாட்சியர்கள் வத்சலா, பாலமுருகன், ராஜேஸ் வரி, பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x