Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அச்சகம், திருமண மண்டபம் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அறிவிப்பு

திருப்பூர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமண மண்ட பங்களின் உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமண மண்டபங்களில் தனிநபர்க ளால் திருமண நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட விவரங் களை, தேர்தல் முடியும் வரை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட்சியர்கள் மற்றும் போலீஸாருக்கு எழுத்துப்பூர் வமாக சம்பந்தப்பட்ட திருமண அழைப்பிதழ் நகல்களுடன் உடனடியாக அளிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி களை நடத்த அனுமதி வழங்கக் கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது தெரியவந்தால் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப் பட்ட அரசியல் கட்சியினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமண மண்டபங்களில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சிநடத்துவதற்கும் அனுமதிக்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளின் போது அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சிக் கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பதாகைகள் மற்றும் கொடிகள் வைக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், அச்சகங்களில் சாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள் இருக்கக்கூடாது.

அச்சிடும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்களில் தங்களது அச்சகத்தின் பெயர், முகவரி மற்றும் விளம்பரம் வெளியிடுவோரின் பெயர், முகவரிவேண்டும். விளம்பர பிரதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும். அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள், போஸ்டர்கள் ஒரு பிரதி மற்றும் எண்ணிக்கை விவரங்களை தங்கள் அலுவலகத்தில் பராமரித்து வர வேண்டும். இதுதொடர்பாக அரசியல்கட்சியினர் மற்றும் வேட்பாளர்க ளுக்கு அளிக்கப்பட்ட ரசீதுகளின் பிரதியை பராமரிக்க வேண்டும்.

வேட்பாளரின் அனுமதி பெற்ற பின்னர் அல்லது அவருடைய கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள், போஸ்டர்கள் அச்சிடப்பட வேண்டும்.

இதில் சாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள் இருக்கக்கூடாது. தனி நபர்களை இழிவுபடுத்தக்கூடிய அல்லது விமர்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக்கூடாது. மேற்கண்ட நடைமுறைகளை மீறும்பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x