Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சொத்து பிரச்சினையில் தாய், மகள் நேற்று கொலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(48). கணவனை இழந்த இவர் மகள் மாதங்கி என்ற சந்தியாவுடன்(24) தனியாக வசித்து வந்தார். கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடிக்கு உட்பட்ட இடையார்பாளையம் பகுதியில் உள்ள அவர்களது விவசாய நிலம் அருகே நேற்று இருவரும் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ரெட்டிச்சாவடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் திற்கு சென்ற ரெட்டிச்சாவடி காவல்நிலைய ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், உறவினர்களுக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
கடலூரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை
கடலூரில் ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியைச் சேர்ந்தவர் பிரபு(37). இவர் கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பிரபு தன் வீட்டின் எதிரே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அங்கு சென்ற தங்கபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், பிரபுவுடன் தகராறு செய்தனர். அங்கு கீழே கிடந்த கல்லால் பிரபுவை சரமாரியாக அடித்து விட்டு சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தங்கபாண்டி யன் உட்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
போலீஸார் விசாரணை நடத்தியதில், உறவினர்களுக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT