Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM
தமிழ்நாடுஆதிதொல்குடி பழங்குடியினர் கூட்டமைப்பின் முதலாவது மாநில செயற்குழுக் கூட்டம் உதகையில் நடந்தது. கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.அழகிய நம்பி தலைமை வகித்தார். அகில பாரதிய ஆதிவாசிவிகாஸ் பரிஷத் மாநிலத்தலைவர் சி.சஞ்சீவி கூறியதாவது:படுகரின மக்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்த தமிழக அரசுக்கு நன்றிகள்.
இக்கோரிக்கையை அங்கீகரித்து, உடனடியாக பழங்குடியினர் பட்டியலில் படுகரின மக்களை சேர்ப்பதோடு, அதை அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பழங்குடியினருக்கு 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
1962-ல் உப்பிலியாபுரம் நீக்கப்பட்டு, சேந்தமங்கலம், ஏற்காடு ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமே பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள பழங்குடியினரும் பயன்பெறும் வகையில், சுழற்சி முறையில் தொகுதி ஒதுக்கீட்டை இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே அமல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நீதிமன்றத்தை நாட செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT