Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

சந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர் கட்டும் பணி தீவிரம்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு 80 அடி உயரமுள்ள தேர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழமை வாய்ந்த மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேர், கடந்த 17-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேரை இழுத்துச் செல்ல 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துருப்பிடிக்காத சங்கிலி இணைக்கப்பட்டு இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சுமார் 80 அடி உயரமுள்ள பெரிய தேர் மற்றும் சுமார் 65 அடி உயரமுள்ள சிறிய தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தேர் கட்டும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x