Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.95 லட்சம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.2.95 லட்சம் தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் தொப் பூரில் ஆவணங்கள் இல் லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.95 லட்சத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் நேற்று நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந் தனர். நேற்று மாலை சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்தக் காரில், முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் எடுத்துச் செல்லப்படுவது தெரிய வந்தது. எனவே, இந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டு தருமபுரி சட்டப் பேரவை தொகுதிக் கான தேர்தல் நடத்தும் அலுவலரும், தருமபுரி கோட்டாட்சியருமான பிரதாப் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், இந்தத் தொகை தருமபுரி சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் போது, வட்டாட்சியர்கள் ரமேஷ், சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x