Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிந்து கூடுதலாக 1,574 துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்ட உள்ளதாக மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வரும் ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், தேர்தல் ஆணையத்தின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிந்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏற்கெனவே உள்ள 2,752 வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்யப்பட்டன. இதில், கூடுதலாக 1,081 துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம், இம்மாவட்டத்தில் 3,833 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்ட உள்ளதாக மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,379 வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்து 493 துணை வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதால், இம்மாவட்டத்தில் மொத்தம் 1,872 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT