Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

வடசென்னை மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தின் முதல் நிலையின் 3 அலகுகளில் 630 மெகாவாட், 2-வது நிலையின் இரு அலகுகளில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல் நிலைக்கு நிலக்கரி எடுத்துச்செல்லும் 2 கன்வேயர் பெல்ட்டுகள் நேற்று திடீரென அறுந்தன. எனவே, முதல் நிலையில் உள்ள 3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 610 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அறுந்த கன்வேயர் பெல்ட்டுகளை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பணி ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x