Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

பரமக்குடி அருகே மஞ்சள் பூசும் திருவிழா கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்

அரியனேந்தல் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சள் பூசும் திருவிழா.

பரமக்குடி

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் மஞ்சள் பூசும் திருவிழா நடைபெற்றது.

அரியனேந்தலில் கருமலையான் கோயில் மாசிக் களரி உற்சவ விழாவில், மஞ்சள் பூசும் நிகழ்ச்சியையொட்டி, கருமலையான், முனியப்பசாமி, பாப்பாத்தி கோயிலில் இருந்து பெட்டி எடுத்து கிராமம் முழுவதும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு மஞ்சள் பூசி அருள்வாக்கு கூறினர்.

முன்னதாக கருமலையான் கோயிலில் கருங்குட்டி, செங்குட்டி, கரும்பு குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும், கரும்புத் தொட்டில் எடுத்தும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அதன்பின் சுவாமி வீதி உலா வந்தபோது, பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். இதில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன், அரியனேந்தல் கிராமத் தலைவர் ராமு, செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சிவகுமார், ஊராட்சித் தலைவர் மணிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x