Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்கியதில், பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொள்ளாச்சியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை ஆனைமலையில் இருந்து சீனிவாசபுரம் வழியாக பொள்ளாச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்தை, சீனிவாசபுரம் பகுதியில் பாலத்தின் மேல் நின்றிருந்த மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இதில் பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்தது. மேலும், பேருந்தின் தற்காலிக ஓட்டுநர், ஆலாங்கடவைச் சேர்ந்த அருண்(26) காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT