Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லக்கூடிய இடமாக, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. வால்பாறையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், சோலையாறு அணையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், கேரள மாநிலத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. சோலையாறு அணைப் பகுதியிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை அடர்ந்த வனப் பகுதி சாலை என்பதால், பகல்நேரத்திலேயே காட்டு யானைகள் சாலையின் குறுக்கே நிற்பதுவழக்கம். மேலும், காட்டெருமை கள், மான்கள், சிறுத்தை ஆகியவையும் இந்த சாலையில் அதிகளவில் நடமாடி வருகின்றன. குறிப்பாக, கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.
இதையடுத்து, வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழித்தடத்தில் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள வனத் துறையினர் கூறும்போது, "வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள், மளுக்கப்பாறை சோதனைச்சாவடி வழியாக அதிரப் பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் சென்று, அங் கிருந்து சாலக்குடி வழியாக கொச்சி செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறையிலிருந்து சாலக்குடி செல்லும் சாலையில் தற்போது யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், மாலை 6 மணிக்குமேல் வாகனங்கள் கேரளா செல்ல அனுமதிக் கப்படுவதில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT