Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

புதுச்சேரி கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஆளுநர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார்

வைத்திக்குப்பத்தில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் சாமி தரிசனம் செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

புதுச்சேரி

மாசிமகத்தையொட்டி புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனும் மக்களோடு மக்களாக பங்கேற்று வழிபட்டார்.

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நேற்று மாசிமகத்தை யொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. செஞ்சி அரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மயிலம்முருகன், வரலட்சுமி விநாயகர்,சுப்பிரமணிய சுவாமி, மேல்மலை யனூர் அங்காளம்மன், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனுவாச பெருமாள் மற்றும் புதுச்சேரியில் இருந்து அங்காள பரமேஸ்வரி, கவுசிக பாலசுப்பிரமணியர், மணக்குள விநாயகர் உள்ளிட்ட ஏராளமானகோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டி ருந்தனர். பின்னர் கடல் தீர்த்தவாரி நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதில், புதுச்சேரி மட்டுமின்றி தமிழகப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வைத்திக்குப்பம் கடற் கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் முன்னோர்க ளுக்கு திதி கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மாசிமக தீர்த்தவாரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மக்களோடு மக்களாக சென்று சாமி தரிசனம் செய்தார்.வைத்திக்குப்பம் பச்சைவாழியம் மன் கோயிலில் தரிசனம் செய்த அவருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடற்கரை பகுதிக்கு சென்று அங்கிருந்த உற்சவர்களையும் அவர் வழிபட்டார்.

மாசிமகத்துக்கு வந்திருந்த பக் தர்களுக்கு பல்வேறு இடங்களில் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தீர்த்தவாரியில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்ததால் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏடிஜிபி ஆனந்தமோகன் உத்தரவின்பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டது.

இதேபோல் வீராம்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மாசி மகத் தீர்த்தவாரி நடைபெற்றது. மாசி மகத்தையொட்டி புதுச் சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x