Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

வில்லியனூர் அருகே கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண் படுகாயம்

புதுச்சேரி

வில்லியனூர் அருகே கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை எடுத்தபோது தவறி விழுந்து வெடித்ததில் பெண் படுகாயமடைந்தார்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் வி.மணவெளி பகுதியைச் சேர்ந்த வர் ஆதிமூலம் (இறந்துவிட்டார்) மனைவி ஆனந்தி (50). இவருக்கு ராஜசேகர் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். மக ளுக்கு திருமணமான நிலையில் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி இயற்கை உபாதைக்காக வெளியில் சென்றுள்ளார். அப் போது அங்குள்ள முள்புதரின் கீழ் நூல்கண்டு வடிவில் பெரிய உருளையான மர்ம பொருள் கிடந்தது. அதை ஆனந்தி கையில் எடுத்தபோது தவறி கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் ஆனந்தியின் இடது கை, கால், கண் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற் பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வில்லியனூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட் டனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘வெடித்த பொருள் நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்தது. மேலும் வெடிகுண்டை தயாரித்த மர்ம நபர் கள் அது முழுமை பெறாத நிலையில், தூக்கி வீசிவிட்டு சென்றுள் ளனர். அதனை கண்ட ஆனந்தி எடுத்து பார்த்தபோது திடீரென வெடித்துள்ளது’’ எனத் தெரிவித் தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x