Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

மதுபானம் கொண்டு செல்லப்படுகிறதா? புதுச்சேரி எல்லையில் தீவிர வாகன சோதனை

புதுச்சேரி

புதுச்சேரி பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள், வருவாய்துறை, கலால் மற்றும் போலீஸார் இணைந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கி றது. மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த தையடுத்து நேற்று முன்தினம் இரவு முதலே பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப் பட்டன. மதுபானம், பரிசுப் பொருட் கள் போன்றவைகள் கொண்டு செல்லப்படுகிறதா? என வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வருவாய்துறை, கலால் மற்றும் போலீஸார் இணைந்து இச்சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோரிமேடு எல்லை, மூலகுளம் எம்ஜிஆர் சிலை அருகே சோதனை நடத்தப்பட்டது. கலால்துறை இணை ஆணையர் சுதாகர், வரு வாய்த்துறை துணை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, எஸ்பி சுபம்கோஷ் தலைமையிலான போலீ ஸார் புதுச்சேரிக்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோத னையில் ஈடுபட்டனர்.

இதனிடையே புதுச்சேரி நகரத்தில் பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள பேனர், விளம்பர தட்டிகள், கொடிக்கம்பங்கள் உள் ளிட்டவற்றை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல்அகற்றி வருகின்றனர். புதியபேருந்து நிலையம், நெல்லித் தோப்பு மார்க்கெட், சாரம், இந்திராகாந்தி சதுக்கம், லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப் பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டன.

இதேபோல் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட மூலகுளம், ரெட்டியார்பாளையம், பகுதிகளி லும் பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றும் பணி நடைபெற்றது. 2-வது நாளாக நேற்றும் புதுச்சேரி அம்பேத்கர் சாலையில் உள்ள பேனர்கள், விளம்பர பதாகைகள் பொதுப்பணித்துறை மற்றும் புதுச்சேரி நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. மேலும், சுவர்களில் எழுதப்பட்டிருந்த காட்சிவிளம்பஙர்களையும் வெள்ளை அடித்து அழித்தனர். கொடிக்கம் பங்களும் அகற்றப்பட்டன.

மேலும், கிராமப் புறங்களிலும் கொம்யூன் பஞ்சாயத்துகள் சார்பில் பேனர், விளம்பர பதாகை கள், சுவரொட்டிகள், சுவர் விளம் பரங்கள் அகற்றப்பட்டன.

விளம்பர பதாகைகள் புதுச்சேரி நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x