Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
புதுச்சேரியில் வாக்கு எண்ணும்மையங்கள் 3 ஆக அதிகரிக்கப்பட் டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று மாலை அவர் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் சுதந்திரமான மற்றும் நேர் மையான முறையில் நடைபெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனாவிதிமுறைகளை பின்பற்றி பாது காப்புடன் தேர்தல் நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.
புதுச்சேரியில் 8 பேர், மாகே,ஏனாம் பகுதிகளுக்கு தலா ஒருவர்என 10 தேர்தல் நடத்தும் அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கீழ் 3 கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியர், காவலர்உள்ளிட்ட 6 பேர் கொண்ட அலுவலர்கள் இருப்பர். சுழற்சி முறையில் இக்குழுக்கள் கண்காணிப்பை மேற்கொள்ளும். இவர்கள் முக்கியச் சாலைகள், சந்திப்பு பகுதிக ளில் வாகன தணிக்கையில் ஈடு படுவார்கள். ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
புதுச்சேரியில் 789 வாக்குச் சாவடிகள் உள்ளன. தற்போது கூடுதலா 536 துணை வாக்குச்சாவடி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 1,325 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இம்முறை வாக்கு எண்ணிக்கை மையங்களும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அரசு மகளிர் பாலி டெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மையங்கள் இருந்தன. தற்போது கூடுத லாக தாகூர் கலைக் கல்லூரி மையம் அமைக்கப்படுகிறது. இத னால் வாக்கு எண்ணிக்கை மையம் மூன்றாக உயர்ந்துள்ளது.
துப்பாக்கி, படைக்கலன்கள் போன்ற ஆயுதங்களை உரிமம் பெற்று வைத்திருப்போர் உடனடி யாக அருகே உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். ஈட்டி, வாள் உள்ளிட்ட அபாயகர மான ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் எடுத்துச் செல்லுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில் விளம்ப ரம் செய்தல், பதாகைகள் வைத்தல்,சுவரொட்டிகள் வைத்தல் போன் றவை தடை செய்யப்பட்டுள்ளதால் அவை உடனடியாக அகற்றப் படுகின்றன. தடையை மீறி வைத்தால் வழக்குப்பதிந்து நடவ டிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் தேர்தல் பிரச் சாரங்களில் அரசியல் கட்சியினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு தேர்தல் காலம் வரை தடை விதிக்கப்படுகிறது.
புதுச்சேரி தேர்தல் அலுவல கத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதால், தேர்தல் தொடர்பான தகவல்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்தல் விதிமீறல்கள் தொடர் பாக சி-விஜில் என்ற செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
அரசியல் கட்சியினர் கூட்டம் தொடர்பாக இணைய வழியில் அதற்குரிய தனி செயலியில் மட்டுமே பதிவு செய்து அனுமதி பெற முடியும். 48 மணி நேரத்துக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT