Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

அங்கன்வாடி சுவர் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள பனையடிப்பட்டி தெற்குத் தெருவில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இக்கட்டிடத்தில் மராமத்துப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பனையடிப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(50) என்பவர் கட்டிடத்தில் சீரமைப்புப் பணியை மேற்கொண்டார். அப்போது திடீரென கட்டிடத்தின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாரிமுத்து பலத்த காயமடைந்தார். திருத்தங்கல்லில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். திருத்தங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x