Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

கழுகாசலமூர்த்தி கோயிலில் மாசிமகத் திருவிழா

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மாசி மகத் திருவிழாவில் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில்பட்டி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜை நடந்தது. மதுரை, ராஜபாளையம், சிவகாசி மற்றும் தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள், கழுகுமலை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், ராஜபாளையத்தைச் சேர்ந்த பக்தர் 16 அடி நீள அலகு குத்தியும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகல் 12 மணிக்கு மேல் சிறப்பு ஹோமம், அபிஷேகம், மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. பவுர்ணமி தினமான நேற்று மாலை 6 மணிக்கு மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x