Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ், ஏழை, எளிய மக்கள்,விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து நேற்றுமுன்தினமே கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் மக்கள் திரண்டு வந்து நகைஅடமானம் வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். முதல்வரின் அறிவிப்புபடி தள்ளுபடி செய்யக்கூடும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றும் பலர் வந்துநகை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஆவல்நத்தம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வி.லெட்சுமணப் பெருமாள் கூறும்போது, “முதல்வர் அறிவிப்பால், நேற்றுமுன்தினம் காலை சிலர் வந்து தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களதுநகைகளை அடமானம் வைத்து பணம்பெற்றனர். நேற்றும் சுமார் 100 பேர்திரண்டு நகை அடமானம் வைத்து பணம்கேட்டனர். தள்ளுபடி கிடைக்கவில்லை யென்றாலும் பரவாயில்லை எனத் தெரிவித்தனர். கிடைத்தால் அவர்களுக்கு லாபம். இல்லையென்றால் வட்டியை செலுத்தி திருப்பிக்கொள்ள வேண்டியது தான்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT