Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

சுவரொட்டிகள் அகற்றம்

நாகர்கோவில்

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகளை போலீஸார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளான கோட்டாறு, இடலாக்குடி, செட்டிகுளம், வடசேரி, கிறிஸ்தவக் கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் நேற்று அழிக்கப் பட்டன.

சுவரொட்டிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி னர். இதுபோல் குமரி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x