Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், கிராமிய கலைகளில் ஈடுபட்டு வரும் 25 கிராமிய கலைஞர்களுக்கு திருப்பத்தூரில் 3 நாட்களுக்கு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையம், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் மாவட்ட அளவிலான கலை பயிற்சிகள் அளிக்கும் முகாம் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் நடை பெற்றது. இதில், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமிய கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை பயிற்சிகள், கலை வல்லுநர் களால் 3 நாட்களுக்கு வழங்கப் பட்டது.
இதில், திருப்பத்தூர் மாவட்டத் தில் பிரசித்திப்பெற்ற நாட்டுப் புறக்கலையான தெருக் கூத்து கிராமிய கலையில் ஈடுபட்டு வரும் 25 கிராமிய கலைஞர்களுக்கு கிராமிய கலை தொடர்பான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர் வுகள் அளிக்கப்பட்டன.
இப்பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு சான்றி தழ் வழங்கும் நிகழ்ச்சி தூயநெஞ்சக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் குமார் வரவேற்றார். திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் முதல்வர் மரிய அந்தோணிராஜ் வாழ்த்துறை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து, கலை பயிற்சி பெற்ற தெருக்கூத்து கலைஞர் களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, கலை பண்பாட்டு துறை, தமிழ்நாடுஇயல், இசை, நாடக மன்றம் சார்பில், கிராமிய கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் 4 நாட்டுப்புறக் கலைக்குழுவினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 27 நாட்டுப் புறக்கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான நிதியுதவி களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
அப்போது, கிராமிய கலை களையும், நாட்டுப்புறக் கலை களையும் உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்ப்பதில் திருப்பத்தூர் மாவட்ட கிராமிய கலைக்குழுவினர் சிறந்து விளங்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT