Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று வானகரத்தில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாகனங்களை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்திவ் மற்றும் மணல் லாரி, டேங்கர் லாரி, ரசாயனம் ஏற்றி செல்லும் லாரி, பார்சல் லாரி, சுற்றுலா வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கட்டுமான இயந்திரங்களின் உரிமையாளர்கள் என 100- க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண்டன முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT