Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
புதுச்சேரி டெம்போ உரிமையாளர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு விக்ரம் டெம்போ உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில்திமுக டெம்போ உரிமையாளர் கள் சங்கம், பாரத மாதா டெம்போஉரிமையாளர்கள் சங்கம், ராஜா-கோரிமேடு வழித்தட உரிமை யாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர் வாகிகள் பங்கேற்றனர்.
இதில், புதுச்சேரியில் டெம்போ உரிமையாளர்கள் மீதுரவுடிகள் தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுவதை கண்டித்தும், மாமூல் கேட்டு தொந்தரவு கொடுக்கும் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT